ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தலைநகரம், நான் அவன் இல்லை படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிந்தவர் மலையாள நடிகை ஜோதிர்மயி. அன்வர், பிலால் உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் அமல் நீரத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஜோதிர்மயி பல்வேறு பட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தற்போது வெளியாகி உள்ள போகன்வில்லா என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பஹத் பாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை இயக்கியுள்ளது ஜோதிர்மயியின் கணவரான இயக்குனர் அமல் நீரத் தான்.
இந்த படத்தில் இந்த முக்கிய கதாபாத்திரத்திற்காக வேறு எங்கும் ஒரு நடிகையை தேடாமல் தனது மனைவியையே நடிக்க வைக்க முடிவு செய்தாராம் அமல் நீரத். இந்த கதாபாத்திரத்திற்காக மொட்டை அடிக்க வேண்டும் என்றாலும் கூட அதுபற்றி கவலைப்படாமல் ஒப்புக்கொண்ட ஜோதிர்மயிக்கு படப்பிடிப்பில் நடனமாடும் காட்சிகளில் எப்படி சமாளிக்க போகிறோம் என்கிற பயம் வந்து விட்டதாம். நடனமாடி நீண்ட நாட்களாகி விட்டதாலும் சரியான உடற்பயிற்சி செய்யாமல் அப்படியே விட்டு விட்டதாலும் நடனம் ஆடுவதில் ஒரு தயக்கம் ஏற்பட்டதாம். அதற்கு பதிலாக எப்படியாவது கீழே விழுந்து காலை முறித்துக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு கூட எனக்கு யோசனை வந்தது என்று கூறியுள்ளார் ஜோதிர்மயி. இருந்தாலும் நடன இயக்குனர் கொடுத்த பயிற்சி மூலம் ஓரளவு சமாளித்து விட்டேன் என்றும் கூறியுள்ளார்.