இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
டாப்பில் உள்ள ஹீரோக்கள் சொந்தமாக படம் தயாரித்து அதில் நடிப்பது இப்போது அதிகமாக இருக்கிறது. அந்தக் காலத்தில் அரிதானதாக இருந்தது. அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாராஜ பாகவதர் 'தியாகராஜா டாக்கி பிலிம் கம்பெனி' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 'சத்திய சீலன்' என்ற படத்தை 52 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரித்து அதில் அவரே நடிக்கவும் செய்தார்.
இதில் அவருக்கு ஜோடியாக எம்.எஸ்.தேவசேனா நடித்தார். எம்.ராமசாமி அய்யர் மன்னர் விக்ரமசிங்காக நடித்தார். பத்மாவதி பாய் ராணி வேதவல்லியாக நடித்தார். சைலன் போஸ் ஒளிப்பதிவு செய்தார், ஜானகி கவிகுஞ்சாராம் இசை அமைத்தார்.
ஜோதிபுரி என்ற கற்பனை தேசத்தின் மன்னர் திடீரென இறந்து விடுகிறார். இதனால் இவருக்கு அடுத்த நிலையில் இருந்த அமைச்சர் ராஜினாமா செய்து விடுகிறார். இதனால் 3வது இடத்தில் இருந்த அமைச்சர் மன்னராக முயற்சிக்கிறார். ஆனால் மக்களோ இறந்த மன்னரின் மகனும், படைத் தளபதியுமான சத்யசீலனே மன்னராக வேண்டும் என்கிறார்கள். இதனால் தனக்கு இடையூறாக இருக்கும் சத்யசீலனை ஒழிக்க பல சதி வேலைகளை செய்கிறார் அமைச்சர். அதை முறியடித்து சத்ய சீலன் எப்படி மன்னர் ஆகிறார் என்பதுதான் படத்தின் கதை. சத்யசீலனாக தியாகராஜ பாகவதர் நடித்திருந்தார். இந்த படத்தின் பிரதி இப்போது இல்லை. சொல்லுபாப்பா... என்ற ஒரு பாடல் மட்டுமே தற்போது படத்திற்கு அடையாளமாக இருக்கிறது.