அல்லு அர்ஜுனின் அபார வளர்ச்சி : சமந்தா வெளியிட்ட பதிவு | அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் | எங்களுக்குள்ளும் சண்டை வரும், பிரிவை யோசிக்க வைத்துள்ளது : ரம்பா | ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது ஏன்? 30 ஆண்டுகள் கழித்து காரணம் சொன்ன ரஜினி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் தலையிட்ட இலங்கை அரசு |
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 45 ஆவது படத்தில் திரிஷா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில் இப்படத்தில் மலையாள நடிகர் இந்திரன்ஸ் மற்றும் மலையாள நடிகை சுவாசிகாவும் இணைந்து இருக்கிறார்கள். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சூர்யா 45 வது படத்தை தயாரிக்கும் ட்ரீம்ஸ் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் அறிவித்து இருக்கிறது. இவர்களில் இந்திரன்ஸ் தமிழில் இதற்கு முன்பு ஆடும் கூத்து, நண்பன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் சுவாசிகா ஏற்கனவே கோரிப்பாளையம் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினியாக நடித்தவர், சமீபத்தில் திரைக்கு வந்த லப்பர் பந்து என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.