2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்த படம் புஷ்பா 2. இந்த படத்தின் முதல் நாள் காட்சியை பார்க்க வந்த ரேவதி என்ற பெண் தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் கைது செய்தார்கள். ஒரு நாள் சிறையில் இருந்து விட்டு மறுநாள் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். அதையடுத்து தனது வீட்டுக்கு அல்லு அர்ஜுன் சென்றபோது வீட்டு வாசலில் அவரது மனைவி அவரை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டார்.
இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார் சமந்தா. அதோடு அந்த வீடியோவை வெளியிட்டிருந்த அல்லு அர்ஜுனின் மனைவி சினேகா ரெட்டி, நான் அழவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் சமந்தாவோ, அந்த வீடியோவுக்கு ஆனந்த கண்ணீர் வடிக்கும் எமோஜிகளை இணைத்து வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.