சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
புஷ்பா 2 படத்தின் முதல்காட்சி திரையிடப்பட்ட போது ரேவதி என்ற 39 வயது பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இது சம்பந்தமாக நேற்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில் புஷ்பா-2 படத்தில் நாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அந்த பதிவில், ‛‛இப்போது நடப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. புஷ்பா-2 படத்தின் முதல் காட்சியின்போது ஒரு பெண் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. அது மிகவும் வருத்தமானதும் கூட. ஆனபோதிலும் அல்லு அர்ஜுன் என்ற ஒருவர் மீது எல்லா பழியையும் சுமத்துவது வருத்தமளிக்கிறது'' என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதையடுத்து தெலுங்கு நடிகர் நானி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛சினிமா துறையினர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அரசு அதிகாரிகளும் ஊடகங்களும் காட்டும் ஆர்வத்தை சாதாரண மக்கள் மீதும் காட்ட வேண்டும். நடந்து முடிந்தது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம். இதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டு இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லோருமே தவறு செய்பவர்கள்தான். ஆனால் இதற்கு எல்லாம் ஒரே ஒரு மனிதர் மட்டும் பொறுப்பேற்க முடியாது'' என்று பதிவிட்டுள்ளார்.