புரமோஷன் நிகழ்ச்சியில் உற்சாகத்தை அடக்க முடியாமல் துள்ளல் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் | தண்டேல் படக்குழுவினருக்கு மீன் கறி சமைத்து பரிமாறிய நாக சைதன்யா | லோக்கல் கேபிள் சேனலில் கேம் சேஞ்ஜர் படத்தை ஒளிபரப்பிய நபர் கைது | கவுதம் மேனன் டைரக்ஷனில் நடிக்கும் விஷால் | 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துல்கர் சல்மானை இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | சுப துக்க நிகழ்வுகளில் மம்முட்டியின் நிழல் போல தொடரும் இளம் நடிகர் | சிங்கம் பின்னணி இசை ஒலிக்க படப்பிடிப்புக்கு வந்த மலையாள நடிகர் | சுரேஷ்கோபி படத்தில் வில்லனாக இணைந்த கபீர் துகான் சிங் | 2025 சங்கராந்தி - வெளியான மூன்று தெலுங்குப் படங்களும் 100 கோடி வசூல் | 'வலிமை', 'துணிவு' சாதனையைக் கூட நெருங்காத 'விடாமுயற்சி' |
விசு அடிப்படையில் ஒரு நாடக கலைஞர், கே.பாலச்சந்தர் நாடகங்கள் நடத்திய காலத்தில் இவரும் நாடகம் நடத்தினார். இவர்களின் நாடகத்திற்குதான் 'ஹவுஸ்புல்' போர்டு போடப்பட்டது. கே.பாலச்சந்தர் சினிமாவில் ஜெயித்ததும் அவரைப்போன்றே விசுவிற்கும் சினிமா ஆசை வந்தது. கே.பாலச்சந்தரிடமே உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டும், அவரது படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதிக் கொண்டும் இருந்தார். இடையிடையே நாடகமும் நடத்தி வந்தார். அதில் ஒரு நாடகம்தான் 'குடும்பம் ஒரு கதம்பம்'.
ஒரே வீட்டிற்குள் வசிக்கும் தனித்தனி குடும்பங்களை பற்றிய கதை. அதை விசு காமெடி நாடகமாக நடத்தி வந்தார். அந்த நாடகத்தை ஒரு நாள் எஸ்.பி.முத்துராமன் பார்த்தார், அதை உடனே சினிமாவாக்க விரும்பினார். யார் கேட்டும் கதையை கொடுக்காத விசு, எஸ்.பி.முத்துராமன் கேட்டதும் கொடுத்தார். நாடகத்தில் தான் நடித்த கேரக்டரில் சிவகுமாரை நடிக்க வையுங்கள் என்று ஆலோசனையும் சொன்னார்.
அதை மறுத்த எஸ்.பி.முத்துராமன் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று கூறினார். 'எனது வசன உச்சரிப்பு நாடக பாணியில் இருக்கும் அது சினிமாவுக்கு செட்டாகாது. சினிமாவுக்கு ஏற்ற மாதிரி எனக்கு இயல்பாக பேச வராது' என்று மறுத்தார். ஆனாலும் முத்துராமன் விடவில்லை. 'நீங்கள் நாடத்தில் பேசுவது போலவே பேசுங்கள் மற்றதை நான் பார்த்து கொள்கிறேன்' என்று கூறி அவரையே நடிக்க வைத்தார். விசுவின் நாடக குழுவில் உள்ள அனைவருக்கும் படத்திலும் நடிக்க வாய்ப்பளித்தார். நாயகி சுஹாசினி, சுமலதா, நாயகன் பிரதாப் தவிர மற்ற அனைவரும் பெரும்பாலும் நாடக கலைஞர்கள்.
கற்பகம் ஸ்டூடியோவில் இருந்த ஒரு வீட்டை சற்று மாற்றி அமைத்து மொத்த படத்தையும் அங்கேயே எடுத்தார் எஸ்.பி.முத்துராமன். படத்தை 28 நாளில் எடுத்து முடித்தார். படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது. அதன் பிறகு விசு முழுநேர நடிகர் ஆனார்.