படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
பொதுவாக விசுவின் படங்கள் என்றாலே குடும்பப் பாங்கான சென்டிமென்ட் படங்கள் தான் நினைவுக்கு வரும். 'மணல் கயிறு, வீடு மனைவி மக்கள், சம்சாரம் அது மின்சாரம், வரவு நல்ல உறவு, மாப்பிள்ளை சார், வா மகளே வா' இப்படியான படங்கள் தான் நினைவுக்கு வரும். ஆனாலும் அவர் பக்கா கமர்சியல் ஆக்சன் படம் ஒன்றையும் இயக்கினார். அந்தப் படம் 'புயல் கடந்த பூமி'.
விமல் என்டர்பிரைசஸ் சார்பாக ஹேமா சக்கரவர்த்தி தயாரித்திருந்தார். இந்த படத்தில் கார்த்திக், அர்ச்சனா, சந்திரசேகர், விசு உட்பட பலர் நடித்திருந்தார்கள். எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார்.
தெலுங்கு மசாலாப்பட பாணியில், தனது கைவண்ணத்தையும் கலந்து விசு இயக்கிய படம் இது. பக்கத்து ஊர் பெரும்புள்ளியான வில்லனிடமிருந்து, ஊரைக் காப்பாற்றும் நாயகர்களின் கதை. பாட்டு, பைட்டு, நடனம் என எல்லா அம்சங்களும் இருந்தும் படம் வெற்றி பெறவில்லை. இதன் பிறகு இது மாதிரியான படங்களையும் அவர் இயக்கவில்லை.