ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
2025ம் ஆண்டின் இரண்டாம் கட்ட சினிமாப் பயணம் இந்த வாரம் ஆரம்பமாகிறது என்று சொல்லலாம். கடந்த மாதத்துடன் 100 படங்கள் வெளிவந்த எண்ணிக்கையை இந்த வருடம் கடந்தது.
இந்த ஜுன் மாதத்தின் முதல் வராமே மிகப் பிரம்மாண்டமான படத்துடன் ஆரம்பமாகிறது. கூடவே, மூன்று சிறிய படங்களும் வருகின்றன. ஜுன் 5ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி மற்றும் பலர் நடித்துள்ள 'தக் லைப்' பான் இந்தியா படமாக வெளியாகிறது. இருந்தாலும் கர்நாடகாவில் படம் வெளியாகுமா இல்லையா என்பது கர்நாடகா உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை எடுத்த பிறகே தெரிய வரும்.
அதே ஜுன் 5ம் தேதி சிவபிரகாஷ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜித் பச்சான், ஷாலி நிவேகாஸ் மற்றும் பலர் நடித்துள்ள 'பேரன்பும் பெருங்கோபமும்' படம் வெளியாகிறது. இயக்குனரும், நடிகருமான தங்கர்பச்சான் மகன் விஜித் பச்சான் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
ஜுன் 6ம் தேதி, 'பரமசிவன் பாத்திமா, மெட்ராஸ் மேட்னி' ஆகிய படங்கள் வெளியாகின்றன. 'பரமசிவன் பாத்திமா' படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்க, தீபன் சக்கரவர்த்தி இசையமைக்க, விமல், சாயாதேவி மற்றும் பலர் நடித்துள்ளார். 'மெட்ராஸ் மேட்னி' படத்தில் காளி வெங்கட், ரோஷினி ஹரிப்ரியன், ஷெல்லி கிஷோர் ஆகியோருடன் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
'தக் லைப்' படத்துடன் மற்ற மூன்று சிறிய படங்களும் தாக்குப் பிடிக்குமா அவற்றிற்கு நிறைவான தியேட்டர்கள் கிடைக்குமா என்பதைப் பொறுத்தே வசூல் இருக்கும். படம் வெளிவந்த பின்புதான் அதற்கான ரிசல்ட் கிடைக்கும்.