தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'தக் லைப்'. பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஜூன் 5ல் வெளியாகிறது. சென்னையில் நடந்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார். நிகழ்ச்சியில் கமல் பேசுகையில், 'தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்' என்றார். இது தொடர்பான வீடியோ வெளியாகி, கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. கர்நாடகாவில் தக் லைப் படத்தை திரையிட மாட்டோம் என அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தெரிவித்தது. இதனால் படத்தை வெளியிட அங்கு தடை ஏற்பட்டுள்ளது. அதேசமயம் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என அவர் கூறிவிட்டார்.
இந்நிலையில் கர்நாடகாவில் தக் லைப் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி, நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், படத்தை திட்டமிட்டபடி ஜூன் 5ல் வெளியிட அனுமதிக்குமாறும், படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடுமாறும் தனது மனுவில் கமல் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு இன்று (ஜுன் 3) விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி நாக பிரசன்னா விசாரித்தார். அப்போது இந்த பிரச்னை தொடர்பாக கமலுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி கேட்டார். குறிப்பாக, ‛‛கன்னட மொழி பற்றி பேசி கர்நாடகாவில் கமல் பதற்றத்தை உருவாக்கி உள்ளார். கன்னட மக்களின் உணர்வை புண்படுத்தி உள்ளார். தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்ததற்கு என்ன ஆதாரம் உள்ளது. கமல் என்ன மொழி ஆய்வாளரா.
கமல் மன்னிப்பு கேட்டால் பிரச்னை முடிந்துவிடும். தவறாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்க முடியாது என்கிறார். மன்னிப்பு கேட்கவில்லை என்றால் எதற்காக கர்நாடகாவில் படத்தை திரையிட வழக்கு தொடர வேண்டும். கன்னட மக்களை சிறுமைப்படுத்திவிட்டு சில கோடிகளை சம்பாதிப்பதற்காக வழக்கு தொடர்ந்துள்ளார். மன்னிப்பு கேட்டால் தான் கமல் சில கோடிகளை சம்பாதிக்க முடியும். இந்த வழக்கு மீண்டும் இன்று மதியம் 2:30 மணிக்கு விசாரணைக்கு வரும். அதற்குள் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.