கணவரை பிரிந்து வாழ்கிறாரா ஹன்சிகா? | ‛‛அப்செட் ஆனால் இதை செய்வேன்'': ரகசியம் சொன்ன கீர்த்தி சுரேஷ் | தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை |
தமிழ் சினிமாவில் இப்போது பிஸியாக நடித்து வரும் நடிகர்களின் ஒருவராக இருக்கிறார் கார்த்தி. அவர் நடித்த வா வாத்தியார் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. அடுத்து சர்தார் 2 பட வேலைகளில் பரபரப்பாக இருக்கிறார். அதற்கடுத்து டாணாக்காரன் தமிழ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். அதற்கடுத்து கைதி 2, தீரன் அதிகாரம் 2 ஆகிய படங்களில் நடிக்க உள்ளார். தவிர ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கப் போகிறார்.
இவ்வளவு வேலைகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி, நடிகர் சங்க பொருளாளராக செயல்படுகிறார். விரைவில் நடிகர் சங்க கட்டடம் திறக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளில் தீவிரமாக இருக்கிறார். அடிக்கடி நடிகர் சங்க தற்காலிகாக அபார்ட்மென்ட் போய் கணக்கு, வழக்குகளை பார்க்கிறார். கட்டட பணிகளில் ஆர்வம் காண்பிக்கிறார். சில ஆண்டுகளாக நடிகர் சங்க வகைக்காக, நலிந்த நடிகர்கள் உதவிக்காக மட்டும் தனது சொந்த செலவில் இருந்து பல லட்சங்களை கார்த்தி வெளியே தெரியாமல் உதவி இருப்பதாக கூறப்படுகிறது.