தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் | ‛ஐ யம் கேம்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | மற்றுமொரு வெற்றி, கடவுளுக்கு நன்றி சொன்ன திரிஷா | ‛திரிஷ்யம் 3' - முதல் காட்சியிலேயே தவித்த ரசிகர்கள் | ஆகஸ்ட் மாதம் துவங்கும் மணிரத்னம், விஜய் சேதுபதி படம் | திகில் முதல் காமெடி வரை.... வரிசைக் கட்டும் ஓடிடி ரிலீஸ்...! | ‛ஏழு கடல் ஏழு மலை' படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் | அர்ஜுன் தாஸின் ‛கான் சிட்டி' ரிலீஸ் தேதி இதோ | ராமாயணா படத்தில் சாய் பல்லவி குரலை வேண்டாம் என்ற இயக்குனர் |

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் புதிய படங்கள் வெளியாகும் போது டிக்கெட் கட்டண உயர்வு கோரி அந்த மாநில அரசுகளிடம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்பின் அவர்களது கோரிக்கையை பரிசீலித்து படத்திற்கேற்றபடி டிக்கெட் கட்டண உயர்வுக்கு அனுமதி அளிப்பார்கள்.
இதுநாள் வரையில் தயாரிப்பாளர்களே நேரடியாக ஆந்திர மாநில அரசுக்கு விண்ணப்பித்து வந்தார்கள். இனி, அப்படி செய்யக் கூடாது, சம்பந்தப்பட்ட சங்கங்கள் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியிருந்தார். அதன்படி அவர் நடித்து இந்த மாதம் 12ம் தேதி வெளியாக உள்ள 'ஹரிஹர வீரமல்லு' படத்திற்காக அதன் தயாரிப்பாளர் தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை மூலம் ஆந்திர மாநில அரசுக்கு விண்ணப்பித்துள்ளார். அதே சமயம், தெலங்கானா அரசுக்கு நேரடியாகவே விண்ணப்பித்துள்ளார்.
அவரது விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு டிக்கெட் கட்டண உயர்வுக்கான அரசாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவன் கல்யாண் பிறப்பித்த உத்தரவை அவர் நடித்த முதல் படமே பின் தொடர்வது ஒரு ஆச்சரிய ஒற்றுமை.




