ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு |
தெலுங்குத் திரையுலகத்தின் இனிமையான காதல் ஜோடியாக வலம் வந்து திருமணம் செய்து கொண்டு சீக்கிரத்திலேயே பிரிந்த ஜோடி நாகசைதன்யா - சமந்தா ஜோடி. பிரிந்த இந்த ஜோடியில் நாக சைதன்யா கடந்த வாரம் 'பொன்னியின் செல்வன்' நடிகை சோபிதா துலிபலாவைத் திருமணம் செய்து கொண்டார்.
அவர்களது திருமணத்திற்கு முன்பும், பின்பும் சில தத்துவமான பதிவுகளை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி சமந்தா. பிரிந்து போனாலும் அவர்களது காதல் நிச்சயம் ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கும். கல்யாணம் வரை வந்து பிரிந்து போன காதல் உண்மைக் காதலா, பொய்க் காதலா என்ற ஏக்கம் சமந்தாவிடம் இருக்கிறது.
நேற்று அவருடைய இன்ஸ்டா ஸ்டோரியில் அவரது வளர்ப்பு நாய் சாஷாவுடன் இருக்கும் சோகமான புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து , “சாஷாவின் காதலைப் போல வேறு காதல் இல்லை,” எனப் பதிவிட்டுள்ளார்.
மனிதக் காதலை விட நாய்கள் வைக்கும் காதல்தான் உண்மையான காதல் என நினைக்கிறார் போலிருக்கிறது.