டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

எத்தனை விதமாக தடுக்க முயற்சி செய்தாலும் நாளுக்கு நாள் முன்னேறும் தொழில்நுட்பங்கள் காரணமாக சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. பிரபலங்களை குறி வைத்து தான் விஷமிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு முன்பாக பல பிரபலங்களும் தங்களது இன்ஸ்டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்) கணக்குகள் தான் ஹேக் செய்யப்பட்டதாக கூறியதை பார்த்து உள்ளோம். தற்போது ஆச்சரியமாக பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மற்றும் பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு எர்லகடா ஆகியோரின் வாட்ஸ் அப் கணக்குகள் சில மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்திய பாகுபலி தயாரிப்பாளர் ஷோபு எர்லகடா தனது எக்ஸ் வலைதளப் பக்கம் மூலமாக தனது வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது வாட்ஸ்அப் கணக்கும் யாராலோ ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றும் தயவு செய்து தன் பெயரில் ஏதேனும் மெசேஜ் வந்தால் அதை நம்பவோ பெரிதுபடுத்தவோ வேண்டாம் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தனது நண்பர்கள், உறவினர்கள் வட்டத்திற்கு தெரியப்படுத்தி உள்ளார். சந்தோஷ் சிவனின் உதவியாளர் வாட்ஸ்அப் கணக்கும் சேர்ந்து ஹேக் செய்யப்பட்டுள்ளது இதில் குறிப்பிடத்தக்கது.