நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? |
தெலுங்கு திரையுலகில் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன் பாபு. இவரது மகன்கள் மஞ்சு விஷ்ணு, மஞ்சு மனோஜ் மற்றும் மகள் லட்சுமி மஞ்சு ஆகியோர் சினிமாவில் நடித்து வருகின்றனர். இதில் மஞ்சு மனோஜ் கடந்த வருடம் பூமா மவுனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இதில் சகோதரர் மஞ்சு விஷ்ணுவுக்கு பெரிய அளவில் விருப்பமில்லை. இந்த திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மஞ்சு மனோஜின் வீட்டிற்கு சென்று கலாட்டா செய்து வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்ததுடன் பூமாவின் உறவினர் ஒருவரையும் அடித்ததாக அப்போது ஒரு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது எதிர்பாராத விதமாக மஞ்சு மனோஜ் தன்னையும் தனது மனைவி பூமாவையும் தாக்கியதாக தனது தந்தை மோகன் பாபு மீதே புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். தந்தை அடித்ததால் ஏற்பட்ட காயங்களையும் அவர் போலீசாரிடம் காட்டியதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் மோகன்பாபுவும் முதலில் தன் மகன் தான் தன்னை தாக்கினார் என்று கூறி தன் பங்கிற்கு மகன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இவர்களுக்குள் கடந்த சில மாதங்களுக்கு மேலாகவே சொத்து பிரச்சனை ஒன்று தீர்க்கப்படாமல் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் அதன் விளைவு தான் இந்த தாக்குதல் மற்றும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புகார் அளித்துக் கொண்டது என்றும் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.