ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
மலையாள திரை உலகில் சமீபகாலமாக நடைபெறும் பல சினிமா நிகழ்வுகளில் கை குலுக்குவது தொடர்பான கலாட்டாக்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் பிரபல மலையாள காமெடி நடிகரும் தற்போது குணச்சித்திர நடிகராக மாறி கதையின் நாயகனாக நடித்து வருபவருமான சுராஜ் வெஞ்சாரமூடு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எக்ஸ்ட்ரா டீசன்ட்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழா அரங்கில் முன் வரிசையில் சுராஜ் உள்ளிட்ட பலர் அமர்ந்திருந்தனர். அப்போது வேக வேகமாக உள்ளே வந்து நாயகி கிரேஸ் ஆண்டனி முதல் வரிசையில் இருந்து அனைவரிடமும் கைகுலுக்கியவர் நாயகன் சுராஜை கவனிக்காமல் நகர்ந்து சென்றார். அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு மீண்டும் பின்னால் வந்து அவரிடம் குலுக்கினார்.
இந்த புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்ட கிரேஸ் ஆண்டனி, “வேண்டுமென்றே செய்யவில்லை சேட்டா, தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள்” என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள சுராஜ் வெஞ்சாரமூடு, “இது எனக்கு மட்டுமல்ல அங்கு அமர்ந்திருந்த நடிகர் டொவினோ தாமஸுக்கும் கூட இதுதான் நடந்தது” என்று கூறினார். இவர்களது கமெண்ட்டுகள் டொவினோ தாமஸின் கவனத்திற்கு வந்ததும் இயக்குநர் பஷில் ஜோசப் நிகழ்ச்சிக்குப் பிறகு நான் யாரிடமும் கை குலுக்குவதை நிறுத்தி விட்டேன் என்று காமெடியாக கூறியிருந்தார்.
இதன் பின்னால் நடந்த இரண்டு சுவாரசியமான நிகழ்வுகளும் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு டொவினோ தாமஸ் நடித்த 'மரண மாஸ்' என்கிற படத்தில் துவக்க விழா பூஜை நிகழ்ச்சி நடந்தபோது அந்த பூஜையை நடத்திய குருக்கள் அனைவருக்கும் ஆரத்தி காட்டியவர் ஹீரோவான டொவினோவை யார் என்று தெரியாமலேயே ஆரத்தி காட்டாமல் கடந்து சென்றார். அந்த நிகழ்வில் கலந்துகொண்ட அவரது நண்பரும் அவரை வைத்து மின்னல் முரளி படத்தை இயக்கியவருமான பஷில் ஜோசப் இந்த நிகழ்வு குறித்து டொவினோ தாமஸிடம் கலாட்டா செய்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வாய்ப்பு ஒன்று டொவினோவுக்கும் வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் கோழிக்கோட்டில் நடைபெற்ற சூப்பர் லீக் புட்பால் இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பஷில் ஜோசப் அந்த அணியைச் சேர்ந்த ஒரு வீரரிடம் கைகுலுக்குவதற்காக கை நீட்டினார். ஆனால் அந்த வீரர் அங்கிருந்த நடிகர் பிரித்விராஜிடம் மட்டும் கைகுலுக்கி விட்டு பஷில் ஜோசப்பை கண்டு கொள்ளாமல் நகர்ந்து விட்டார். இந்த நிகழ்வு அப்போது ரொம்பவே காமெடியாக அதே சமயம் பரபரப்பாக பேசப்பட்டது. மலையாள திரையுலகில் கைகுலுக்குவதில் கூட இவ்வளவு கலாட்டா நடக்கிறதா என்கிற ஆச்சரியம் தான் இதைப் பார்க்கும்போது நமக்கு ஏற்படுகிறது.