மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி | 7ஜி ரெயின்போ காலனி 2 ரிலீஸ் எப்போது | தெலுங்கு படத்தை இயக்க தயாராகும் அஸ்வத் மாரிமுத்து | சிவகார்த்திகேயன், சிம்பு, விஷால் படங்கள் மோதல் | என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா கஷ்டபடுவாங்க : ஷாலின் சோயா | அமெரிக்கா வசூல் : 9 வருட சாதனையை முறியடித்த 'துரந்தர் 2' | 'டகாய்ட்' படத்தில் ஜோனிடா காந்தி நடனம் : அதிர்ச்சியில் ரசிகர்கள் | எங்களை நாங்களே கலாய்ச்சிப்போம் : 'எல்ஐகே' குழு | கல்லூரி விழாக்களில் நடிகைகளின் 'கிளாமர் நடனம்' : சமூக வலைத்தளங்களில் கண்டனம் | திருவிளையாடல், அவள் ஒரு தொடர்கதை, பைசன் : ஞாயிறு திரைப்படங்கள் |

நடிகர் திலகத்தின் வாரிசுகள் பிரபும், ராம்குமாரும். பிரபு சினிமாவில் அறிமுகமாகி 250 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். ஆனால் இன்னொரு வாரிசான ராம்குமார் சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை.
ஆரம்பத்தில் நடிப்பு ஆர்வம் இல்லாத ராம்குமார் படம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார். சிவாஜி புரொடக்ஷன் நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். 1986ம் ஆண்டு 'அறுவடை நாள்' என்ற படத்தை தயாரித்தார், இதனை தற்போது நடிகராக இருக்கும் ஜி.எம்.குமார் இயக்கினார். இதில் பிரபுவும், பல்லவியும் காதலர்களாக நடித்தனர். அவர்களுக்கு உதவும் கிறிஸ்தவ பாதிரியாராக ராம்குமார் நடித்தார்.
படம் வெற்றி பெற்ற போதும் ராம்குமாருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்றாலும் 'மைடியர் மார்த்தாண்டன்' உள்ளிட்ட சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். ரஜினியின் 'சந்திரமுகி' படத்தில் வரும் ஒரு பாடலில் சில வினாடிகள் வந்துபோவார். ஷங்கர் இயக்கிய 'ஐ' படத்தில் வில்லனாக ரீ எண்ட்ரி ஆனார். அதன்பிறகும் பெரிய வாய்ப்புகள் இல்லை. சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்தார்.