அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான படம் 'புஷ்பா 2'. இப்படம் முன் பதிவிலேயே 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. அதனால், முதல் நாள் வசூலாக மிகப்பெரும் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றபடியே அமைந்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய முதல் நாள் வசூல் மட்டும் உலக அளவில் சுமார் 200 கோடியைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். சில தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் இணையதளங்கள் 250 கோடியைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது என்றும் செய்தி வெளியிட்டுள்ளார்கள். இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் சொல்வதுதான் அதிகாரப்பூர்வமானது. எப்படியும் இன்னும் சில மணி நேரங்களில் தயாரிப்பு நிறுவனம் அதை அறிவித்துவிடும். அதுவரையிலும் அவரவர் விருப்பப்படி 200 கோடி, 250 கோடி என்று சொல்வார்கள்.
உலக அளவில் எவ்வளவு வசூலிக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும், தெலுங்கைப் பொறுத்தவரையில் நிச்சயம் புதிய வசூல் சாதனை என்பது மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும் என தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.