வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்த ஏ.எம்.ரத்தினத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா. சினிமாவில் இயக்குனராக அறிமுகமான அவர் எனக்கு 20 உனக்கு 18, கேடி, படங்களை இயக்கினார். தமன்னா, இலியானா, ஸ்ரேயாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். பின்னர் 'ஊலலலா' என்ற படத்தை இயக்கி தானே நடித்தார். இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் தெலுங்கு படங்களை இயக்கினார், ஆக்சிஜன், ரூல்ஸ் ரஞ்சன் படங்களை இயக்கினார். இவைகளும் பெரிதாக பேசப்படவில்லை.
இந்த நிலையில் அவர் பெரிய பட்ஜெட்டில் முன்னணி நடிகரும், துணை முதல்வருமான பவன் கல்யாண் நடிப்பில் 'ஹரி ஹர வீரமல்லு' படத்தை இயக்கி வருகிறார். இது ஒரு பீரியட் படமாகும். பவன் கல்யாண் நடிக்கும் முதல் பீரியட் படமும் இதுதான். இப்படம் 17ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் நடக்கும் ஆக்ஷன்- அட்வென்ச்சர் படமாகும். ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழைகளுக்கு உதவுவதற்காக ஊழல் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடும் புகழ்பெற்ற ஹரி ஹர வீர மல்லுவின் கதை.
பவன் கல்யாணுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல் முகலாய பேரரசராகவும், நிதி அகர்வால் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நாசர், ரகு பாபு, சுனில் மற்றும் நோரா பதேஹி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கீரவாணி இசை அமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்தில் இந்தப் படம் அடுத்த ஆண்டு மார்ச் 28ல் வெளியாகிறது.