பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்து ஜுன் மாதம் தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'மகாராஜா'. இப்படம் கடந்த வாரம் நவம்பர் 29ம் தேதி சீனாவில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது.
அங்குள்ள சீன சினிமா ரசிகர்களிடமும் இப்படம் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் வெளியாகி ஒரு வாரம் முடிய உள்ள நிலையில் மொத்தமாக 40 கோடி வசூலை அப்படம் வசூலித்துள்ளது.
சீனாவில் அதிகம் வசூலித்த தமிழ்ப் படம் என்ற சாதனையை ஏற்கெனவே கடந்துவிட்டது 'மகாராஜா'. ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படம் அங்கு வெளியாகி 22 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்தது. 'மகாராஜா' படம் முதல் வாரத்தைக் கடந்தும் சீனாவில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.