அன்னை இல்லத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை: ராம்குமார் பிரமாண மனு தாக்கல் | பாவனா தயாரிக்கும் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் அனிமல் பட இசையமைப்பாளர் | போதை வழக்கில் முன்ஜாமின் கோரிய மனுவை வாபஸ் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | 'ஆலப்புழா ஜிம்கானா' படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன் | மே 9ல் ரிலீஸ் ஆகும் திலீப்பின் 150வது படம் | ஓடிடி.,க்கு அதிக விலைக்கு போன டாப் தமிழ் படங்கள் | 20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! | 'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! |
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்த 'புஷ்பா 2' படம் இன்று(டிச., 5) பான் இந்தியா படமாக வெளியானது.
இப்படத்தின் பிரிமியர் காட்சி நேற்று ஹைதராபாத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் நடந்தது. அந்தக் காட்சியில் நடிகர் அல்லு அர்ஜுனும் படம் பார்த்தார். தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக போலீசார் தடியடி நடத்தினர். அதனால் கலைந்த ஓடிய கும்பலில் ஒருவர் மீது மற்றவர் விழுந்து தவித்தனர். அதில் 39 வயது பெண் ஒருவர் இறந்து போனார். கணவர், தனது இரண்டு குழந்தைகளுடன் அந்தப் பெண் படம் பார்க்க வந்திருந்தார்.
இதனிடையே, அந்தப் பெண் குடும்பத்திற்கு உதவி செய்வோம் என தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில், “நேற்று இரவு திரையிடலின் போது நடந்த சோகமான சம்பவத்தால் நாங்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளோம். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அந்தக் குடும்பம் மற்றும் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் சிறு குழந்தையுடன் உள்ளன. இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக நிற்பதற்கு சாத்தியமான அனைத்து ஆதரவை வழங்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்கள்.