சிரஞ்சீவி படத்தை தயாரிக்கும் நானி | 'லவ் டுடே' பாணியில் உருவாகும் 'ரிங் ரிங்' | ''மனைவியின் பேச்சை கேளுங்க'': கணவன்மார்களுக்கு அட்வைஸ் செய்த அபிஷேக் பச்சன் | விமல் ஜோடியாக மீண்டும் நடிக்கும் சாயாதேவி | நடிப்புக்கு முழுக்கா?: நடிகர் விக்ராந்த் மாஸே திடீர் 'பல்டி' | 'மழையில் நனைகிறேன்' விஜய்சேதுபதி நடிக்க வேண்டிய படம் : இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக் : இயக்குனராக மேஜர் சுந்தர்ராஜன் | பிளாஷ்பேக்: இந்தியாவின் முதல் அந்தாலஜி படம் | நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை நாடாள வைத்த “நாடோடி மன்னன்” உருவான பின்னணி |
அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள 'புஷ்பா 2' படம் நாளை மறுதினம் டிசம்பர் 5ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. தெலுங்கில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் படம் வெளியான நாளிலிருந்து சில நாட்களுக்கு டிக்கெட் கட்டண உயர்வை ஆந்திரா மற்றும் தெலங்கானா அரசுகள் கடந்த சில வருடங்களாக வழங்கி வருகிறது.
'புஷ்பா 2' படத்திற்கான டிக்கெட் கட்டண உயர்வு எவ்வளவு என்பதை அரசாணை மூலம் அறிவித்தது தெலங்கானா அரசு. ஆனால், ஆந்திர மாநில அரசு ஆணை வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் அல்லு அர்ஜுன், தற்போதைய ஆந்திர அரசின் கூட்டணிக்கு எதிராகப் போட்டியிட்ட அவருடைய நண்பருக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது முதலே ஒரு சர்ச்சை இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு டிக்கெட் கட்டண உயர்வை ஆந்திர மாநில அரசும் அறிவித்தது. ஏறக்குறைய தெலங்கானா அரசு உயர்த்திய கட்டணம் போலவே ஆந்திர மாநில அரசும் உயர்த்தியுள்ளது. பிரிமியர் காட்சிகளுக்கான கட்டணமாக ரூ.800ம், சிங்கிள் தியேட்டர்களுக்கு அதிகபட்சமாக ரூ.150ம், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு அதிகபட்சமாக ரூ.200ம் டிசம்பர் 5ம் தேதி முதல் டிசம்பர் 17ம் தேதி வரை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5ம் தேதி 6 காட்சிகளும், 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை 5 காட்சிகளையும் நடத்திக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில அரசு டிக்கெட் கட்டண உயர்வுக்கு அரசாணை வெளியிட்டதற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருக்கு 'புஷ்பா 2' நாயகன் அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார்.