நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

தமிழ் சினிமாவில் கடந்த மாதம் வெளிவந்த 'கங்குவா' படம் தியேட்டர்களில் ரசிகர்களின் விமர்சனங்களாலும், ஊடகங்களின் விமர்சனங்களாலும் அதன் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது என்று திரையுலகில் சர்ச்சை எழுந்தது. தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தியேட்டர்களில் ரசிகர்களின் கருத்துக்களை யு டியூப் சேனல்கள் எடுப்பதைத் தடுக்க வேண்டும், விமர்சனங்கள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதே கருத்தை நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் வலியுறுத்தியது.
அதையடுத்து தியேட்டர்களில் யு-டியுப் சேனல்கள் ரசிகர்களின் கருத்துக்களை வீடியோ எடுப்பதை தியேட்டர்காரர்கள் அனுமதிக்கவில்லை. அதனால், கடந்த இரண்டு வாரங்களாக தியேட்டர்களின் வெளியே அந்த வீடியோவை எடுத்து வருகின்றனர்.
இதனிடையே, தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திரைப்பட விமர்சனங்களை யு-டியுப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் வெளியிட மூன்று நாட்களுக்குத் தடை விதிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென 'ரிட் மனு' ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று(டிச., 3) விசாரணைக்கு வர இருக்கிறது.




