100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
நிதிலன் சாமிநான் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் ஜுன் மாதம் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'மகாராஜா'. கடந்த வாரம் நவம்பர் 29ம் தேதி சீனாவில் வெளியானது. அங்கும் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த நான்கு நாட்களில் இப்படம் சுமார் 30 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 26000 காட்சிகளாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வாரமும் தொடர்ந்து ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் படம் வெளியான போது வந்த வசூலாக சுமார் 110 கோடி வரை இப்படம் வசூல் செய்திருந்தது. தற்போது சீனா வசூலுடன் சேர்ந்து 140 கோடியாக உயர்ந்துள்ளது. அடுத்து ஜப்பான் நாட்டிலும் படத்தை வெளியிட உள்ளார்கள். சீனாவில் கிடைத்த வரவேற்பைப் போலவே ஜப்பான் நாட்டிலும் கிடைத்தால் மொத்தமாக 200 கோடி வசூலை இப்படம் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.