வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
ராஞ்சனா, அட்ரங்கி ரே ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'தெரே இஸ்க் மெயின்' என்கிற ஹிந்தி படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. அதன் பிறகு இப்படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
அதேசமயம், ‛நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை தனுஷ் இயக்கி முடித்துள்ளார். இப்படம் வெளியாகும் முன்பே ‛இட்லி கடை' என்ற மற்றொரு படத்தை இயக்கி, நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் கனமழை காரணமாக ஒரு வாரம் படப்பிடிப்புக்கு இடைவெளி விட்டுள்ளார் தனுஷ்.
இதற்கிடையே 'தெரே இஸ்க் மெயின்' திரைக்கதை விவாதம் பணிகள் டில்லியில் நடைபெற்று வருகிறது. இதில் கதை எழுத்தாளர் மற்றும் இயக்குனருடன் தனுஷ் கலந்து கொண்டுள்ளார். இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் துவங்கும் என்கிறார்கள்.