நான் சினிமாவில் இருப்பதற்கு என் மனைவி தான் காரணம் - சிவகார்த்திகேயன் | விடாமுயற்சிக்கும், கேம் சேஞ்சருக்கும் இடையே போட்டியா ?- எஸ்.ஜே.சூர்யா | ஸ்ரீலீலாவை 'ஓவர் டேக்' செய்த ரஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவின் தந்தையை விரட்டிய தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : நாடகத்தையும், சினிமாவையும் இணைத்த கோமல் சாமிநாதன் | ஒரே ஆண்டில் 80 கோடி வரி செலுத்தி விஜய் சாதனை | கனடா நாடாளுமன்றத்தில் கருணாசுக்கு கவுரவம் | கன்னட நடிகை ஷோபிதா மரணம் | தமிழ் ஹீரோக்களுக்கு சறுக்கலைத் தந்த சரித்திரப் படங்கள் | ‛காந்த கண்ணழகி' பெயர் சில்க் ஸ்மிதாவிற்கு தான் பொருந்தும்... - கனவாய் கலைந்து போன கவர்ச்சி தாரகை |
அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'புஷ்பா 2' படம் இந்த வாரம் டிசம்பர் 5ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. தெலுங்கில் டாப் நடிகர்களின் புதிய படங்கள் வெளியாகும் போது சுமார் ஒரு வார காலத்திற்கு டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள தெலங்கானா, ஆந்திர மாநில அரசுகள் அனுமதி தருகின்றன.
'பாகுபலி' படத்திலிருந்து இந்த நடைமுறை ஆரம்பமானது. அதன்பின் ஒவ்வொரு பான் இந்தியா படம் அல்லது, டாப் நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது தயாரிப்பு நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப டிக்கெட் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகிறது.
'புஷ்பா 2' படத்திற்கான டிக்கெட் கட்டண உயர்வை தெலங்கானா மாநில அரசு அறிவித்தது. சிங்கிள் தியேட்டர்களில் அதிகபட்சமாக ரூ.150ம், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அதிகபட்சமாக ரூ.200ம் உயர்த்தப்பட்டுள்ளது. பிரிமியர் காட்சிகளுக்கான கட்டணமாக ரூ.800 வசூலிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட் கட்டண உயர்வு மிக அதிகமானது என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. சிங்கிள் தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணமாக ரூ.350ம், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணமாக ரூ.590ம் ஆக 'புஷ்பா 2' படத்திற்கான டிக்கெட் கட்டணம் வருகிறது.
இதற்கு முன்பு வெளியான பிரம்மாண்டத் திரைப்படமான 'கல்கி 2898 எடி' படத்திற்குக் கூட இவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இத்தனைக்கும் அந்தப் படத்தின் பட்ஜெட் 'புஷ்பா 2' படத்தின் பட்ஜெட்டை விடவும் அதிகம். இருந்தாலும் முதல் நாள் முன்பதிவு அமோகமாகவே இருக்கிறது.
இவ்வளவு அதிகமாக டிக்கெட் கட்டணங்களை உயர்த்திவிட்டு முதல் நாளிலேயே 100 கோடி 200 கோடி வசூல் என தெலுங்குத் திரையுலகத்தினர் அதை வசூல் சாதனை என சொல்லிக் கொள்வது பொருத்தமற்றது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.
தெலங்கானா அரசு டிக்கெட் கட்டண உயர்வு குறித்த அரசாணையை வெளியிட்டு இரண்டு நாட்களாகிவிட்டது. ஆனாலும், ஆந்திர மாநில அரசின் அரசாணை இன்னும் வெளியாகவில்லை.