நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ‛அமரன்'. அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம் தோல்வியடைந்ததால் இந்த அமரன் படம் தொடர்ந்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையில் உருவான இந்த அமரன் படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதற்கு காரணமே இயக்குனர் விஷ்ணுவர்தன்தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அஜித் நடித்த ‛பில்லா, ஆரம்பம்' உள்பட பல படங்களை இயக்கியவர் விஷ்ணு வர்தன். தற்போது ‛நேசிப்பாயா' படத்தை இயக்கியுள்ளார். இவர் ஹிந்தியில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் ‛ஷெர்ஷா' என்ற ஒரு படத்தை இயக்கினார். இந்த படம் மறைந்த ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை கதையில் உருவாகி இருந்தது. கடந்த 2021ம் ஆண்டு திரைக்கு வந்தது. இந்த படத்தின் வெற்றியை பார்த்து தான் தனக்கு முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு கதையை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமே வந்ததாக விஷ்ணு வர்தனிடத்தில் கூறியுள்ளார் கமல்ஹாசன்.
இந்த தகவலை தற்போது வெளியிட்டுள்ள இயக்குனர் விஷ்ணுவர்தன், நான் இயக்கிய ஷெர்ஷா படம் தான் அமரன் படம் உருவாக காரணம் என்று கமல்ஹாசன் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.