விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! |
டிவி சீரியல் இயக்குனர், சினிமாவில் இயக்குனர், சிறு வேடங்களில் சினிமாவில் நடிப்பு, வில்லன், குணச்சித்திரம் என நடித்து தற்போது தெலுங்கிலும் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சமுத்திரக்கனி.
கதையின் நாயகனாக சில படங்களில் ஏற்கெனவே நடித்துள்ளார், தற்போதும் நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்துள்ள இரண்டு படங்கள் அடுத்த மாதம் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
நடிகர் தம்பி ராமையாவின் மகன், உமாபதி ராமையா இயக்கத்தில், சமுத்திரக்கனி, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ள 'ராஜாகிளி' படம் டிசம்பர் 13ம் தேதி வெளியாக உள்ளது.
அதற்கடுத்து டிசம்பர் 20ம் தேதி சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனன்யா, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ள 'திரு.மாணிக்கம்' படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படங்கள் தவிர 'ராமம் ராகவம்' என்ற படத்திலும் கதையின் நாயகனாக நடித்துள்ளார் சமுத்திரக்கனி. இந்தப் படமும் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.