விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! |
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் சமுத்திரக்கனி. தெலுங்கு பக்கமும் அடிக்கடி சென்று நடித்துவிட்டு வருகிறார். குணச்சித்திரம், வில்லன் என நடித்தாலும் அவ்வப்போது கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
அப்படி அவர் நடித்த இரண்டு படங்கள் அடுத்த வாரம் டிசம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளன. 'ராஜாகிளி, திரு மாணிக்கம்' ஆகிய இரண்டு படங்கள்தான் அவை. 'ராஜாகிளி' படத்தில் தம்பி ராமையாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய மகன் உமாபதி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் தமிழகத்தில் பிரபலமாக இருந்து சர்ச்சையில் சிக்கி சிறைக்குச் சென்று மரணம் அடைந்த ஒரு தொழிலதிபரின் கதை என்று சொல்லப்படுகிறது.
'திரு மாணிக்கம்' படத்தை நந்தா பெரியசாமி இயக்க சமுத்திரக்கனி ஜோடியாக 'நாடோடிகள்' பட கதாநாயகி அனன்யா நடித்துள்ளார். இந்தப் படம் ஒரு குடும்பக் கதையாம். டிசம்பர் 27ம் தேதி இந்தப் படங்களுடன் இன்னும் நான்கைந்து படங்கள் வெளிவர உள்ளது.