ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு மாணவன் போட்ட வழக்கு : அமரன் பட செல்போன் எண் நீக்கம் | சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை |
1945ம் ஆண்டு லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் தியாராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தபோது தமிழ் திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்தது. அதன்பின்னர் இந்த வழக்கு லண்டன் பிரிவியு கவுன்சிலில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு செலவு மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் விடுதலைக்கு நிதி திரட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட படம்தான் 'பைத்தியக்காரன்'. இந்த படத்தில் நடித்தவர்கள் சம்பளம் வாங்காமல் நடித்தனர். குறிப்பாக அன்றைக்கு முன்னணியில் இருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துக் கொடுத்தார். எம்ஜிஆர் சிறப்பு தோற்றத்தில் நடித்த படம் இதுவாகத்தான் இருக்கும்.
படம் தயாராகி கொண்டிருக்கும்போதே ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய தீர்ப்பு வெளியானது. பாகவதர் மற்றும் என்.எஸ்.கே இருவரும் நிரபராதிகள் என சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. 2 வருடங்கள் 2 மாதங்கள் 13 நாள்கள் சிறைவாசத்திற்குப்பின் விடுதலையானார்கள்.
இதில் இன்னொரு சுவாரஸ்யமான தகவல் உண்டு. இந்த படத்தில் எம்ஜிஆர் ஜோடியாக என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி டி.ஏ.மதுரம் நடித்தார். பின்னர் கலைவாணர் விடுதலையானதும், அவரும் படத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கும் மனைவியாக நடித்தார் மதுரம். அதற்கேற்ப கதையில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த படத்தில் தனது சிறை அனுபவத்தை 'ஜெயிலிக்குப் போய் வந்த...' என்று துவங்கும் ஒரு பாடலாக பாடி இருந்தார் என்.எஸ்.கிருஷ்ணன். அது அப்போது பெரிய காமெடி பாடலாக வரவேற்பை பெற்றது.
நடிகர் சங்கம் மரியாதை
இன்று அவரது 116வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு இன்று (29.11.2024) காலை நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர்கள் ராஜேஷ், லதா, நியமன செயற்குழு உறுப்பினர்கள் லலிதா குமாரி, அனந்த நாராயணன், சவுந்தர்ராஜன், தாசரதி, நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.