ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு மாணவன் போட்ட வழக்கு : அமரன் பட செல்போன் எண் நீக்கம் | சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை |
ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே, கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி, வாராய் நீ வாராய், உலவும் தென்றல் காற்றினிலேக் உள்பட ஏராளமான காலத்தை கடந்து நிற்கும் பாடல்களை எழுதியவர் அ.மருதகாசி. 1949ல் பாடல்கள் எழுத தொடங்கிய அவர், சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் 4,000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
அவரது பாடல்கள் சமான்ய மக்களின் குரலாகவும், காதலாவும் ஒலித்தது. காரணம் அடிப்படையில் அவர் ஒரு விவசாயி என்பதே. கொள்ளிடம் ஆற்றின் அக்கரை தஞ்சை மாவட்டம் என்றால், இக்கரை திருச்சி மாவட்டம். அங்கே பழுர் மேலக்குடிக்காடு என்ற விவசாய கிராமத்தில் அய்யம்பெருமாள் - மிளகாயி தம்பதியின் மூன்றாவது பிள்ளையாக 1920ல் பிறந்தவர். மருதகாசியின் தந்தை 35 ஏக்கர் விவசாய நிலம் கொண்ட நிலச்சுவான்தார். கிராமத்து நாட்டாமையாகவும், முன்சீப்பாகவும் இருந்தவர்.
தனது மகனைச் சிறந்த கல்விமானாக்க வேண்டும் என்று, பரிசலில் கொள்ளிடம் ஆற்றைக் கடந்துசென்று, அக்கரையில் நிறுத்தப்பட்டியிருக்கும் வில்லு வண்டியில் மகனை ஏற்றி கும்பகோணத்துக்கு தொடக்கக் கல்வி பயில அனுப்பினார். நகராட்சிப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையும் பின்னர் அங்குள்ள சிறு மலர் உயர்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு வரையும் படித்தார். அந்தப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தவர் ராஜகோபால். இவர் தமிழ்த் திரையுலகின் முன்னோடிப் பாடலாசிரியர் பாபநாசம் சிவனின் சகோதரர். எம்.ஜி.ஆரின் துணைவியார் வி.என்.ஜானகியின் வளர்ப்பு தந்தை. இவரிடம்தான் முறையான தமிழ் இலக்கணப் பயிற்சி எடுத்துக்கொண்டார்.
நாடக உலகம்தான் அவரைத் திரைக்கு அடையாளம் காட்டியது. பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதே நாடகம் எழுதி, அவற்றுக்குப் பாடல்கள் எழுதி ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றார். இதனால் அவருக்கு நாடக உலகம் மீது ஈடுபாடு எழுந்தது. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் பின்னணி பாடகர்களுக்கான ஆடிசன் நடத்தியது. அதற்கு சென்ற திருச்சி லோகநாதன், மருதகாசி நாடகத்திற்கு எழுதிய சில பாடல்களை பாடி காட்டினார். அந்த பாடல் வரிகளால் ஈர்க்கப்பட்ட டி.ஆர்.சுந்தரம் பாடல்களை எழுதியது யார் என்று கேட்டார். மருதகாசி பெயரை திருச்சி லோகநாதன் சொல்ல அவரை உடனே கிளம்பி சேலம் வரச்சொல்லி தந்தி அடித்தார். மருதகாசி வந்தார், சினிமாவில் வென்றார்.
இன்று அவரது 35வது நினைவு நாள்.