தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் |
வர்க்கிங் ஹவுஸ் புரொடக்ஷன் தயாரிக்கும் படம் 'பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே'. ஹீரோவாக யோகி பாபு நடிக்கிறார். ஹீரோயின்களாக அறிமுக நடிகைகள் சிம்ரன், சவுமியா, பிரியா நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி முருகேஸ்வர காந்தி இயக்கும் இப்படத்திற்கு கவுதம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெப்ரி இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் முருகேஸ்வர காந்தி கூறியதாவது : நல்ல கதைக்களம் கொண்ட மிகப்பெரிய காமெடி திருவிழாவாக மட்டுமின்றி, மக்களை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைக்ககூடிய திரைப்படமாக உருவாகும் படம். யோகி பாபு கதையின் நாயகனாக வைத்து நாங்கள் தயாரிக்கும் முதல் படமான 'பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' குடும்பத்துடன் பார்க்க கூடிய காமெடி கமர்ஷியல் படமாக இருக்கும். படத்தின் தலைப்பில் சர்ச்சை இருப்பதாக நான் கருதவில்லை. கதைக்கு பொருத்தமான தலைப்பு. தலைப்பிற்குரிய கண்ணியத்தை படம் காக்கும். என்றார்.