நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'புஷ்பா 2' படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம்தான் முடிவடைந்தது. இணைப்பு காட்சிக்கான படப்பிடிப்பு நடந்ததாகத் தெரிகிறது.
ஆனாலும், நேற்றே இப்படம் ஓடும் நேரம் குறித்து தகவல்கள் பரவி வருகிறது. 3 மணி நேரம் 21 நிமிடம் படத்தின் நேரம் இருக்கும் என்பதுதான் அது. 'புஷ்பா 1' படம் 3 மணி நேரத்திற்கு ஒரு நிமிடம் குறைவாக இருந்தது. ஆனால், 'புஷ்பா 2' அதைவிட 20 நிமிடங்களுக்கும் அதிகமாக இருக்கிறது.
அப்படி இருந்தால் இந்திய சினிமாவில் அதிக நேரம் கொண்ட படங்களில் ஒன்றாக இந்தப் படமும் இருக்கும். தெலுங்கில் கடந்த சில வருடங்களில் வந்த படங்களில் 2022ல் வந்த 'ஆர்ஆர்ஆர்' படம் 3 மணி நேரம் 6 நிமிடங்கள், இந்த வருடம் வெளிவந்த 'கல்கி 2898 எடி' படம் 3 மணி நேரம் 1 நிமிடம் ஓடிய படங்களாக இருந்தன.
இந்த வருடத்தின் கடைசி பிரம்மாண்டப் படமாக இருக்கப் போகும் 'புஷ்பா 2' படத்தை எவ்வளவு நீளமான படமாக இருந்தாலும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ரசிக்கத்தான் போகிறார்கள்.