என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? |
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பப்லு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ஏஸ்'. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. ஆக்சன் கதையில் உருவாகியுள்ள இப்படம் மே 23ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த ஏஸ் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதில், இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் அளித்திருப்பதாகவும், இப்படம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் அதாவது 156 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டது என்றும் தெரிவித்துள்ளார்கள். மேலும், இந்த படத்திற்கு பிறகு 'ட்ரெயின், தலைவன் தலைவி' போன்ற படங்களில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.