பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் |

தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் தனது பதினைந்து ஆண்டு கால நண்பரான தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை கீர்த்தி சுரேஷ் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாகி வந்தது. அந்த செய்தியை தற்போது கீர்த்தி சுரேஷ் ஒரு புகைப்படத்துடன் தனது இணைய பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
அவருடைய பதிவில், கீர்த்தி சுரேஷும் ஆண்டனியும் சூரியனை பார்த்து நிற்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டுகிறார். அதோடு, 15 ஆண்டு மற்றும் கவுண்டிங் என்று சொல்லி, எப்போதும் ஆண்டனி கீர்த்தி என்று பதிவிட்டுள்ளார். அதோடு உங்களுக்கு தெரிந்தால் உங்களுக்கு தெரியும் என்றும் பதிவிட்டுள்ளார்.
அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஆண்டனியை திருமணம் செய்து கொள்வது உறுதியாகி இருக்கிறது. என்றாலும் திருமண தேதியை அவர் உறுதிப்படுத்தவில்லை. மேலும், கீர்த்தி சுரேஷின் வருங்கால கணவரான ஆண்டனியின் சொந்த ஊர் கேரளா. இவருக்கு கொச்சின், சென்னை, துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் நிறுவனங்கள் உள்ளன.