'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! | 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் | தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஆனால், பின்னணி இசையை அவர் செய்யவில்லை. அவருக்குப் பதிலாக, தமன், சாம் சிஎஸ், அஜனீஷ் லோகநாத் உள்ளிட்டவர்கள் செய்து வருகிறார்கள் என இரண்டு வாரங்களாக செய்திகள் வந்தது.
நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற 'புஷ்பா 2' விழாவில் தயாரிப்பாளர் பெயரைக் குறிப்பிட்டே தனது மனக் குமுறல்களை வெளிப்படையாகக் கொட்டினார் தேவி ஸ்ரீ பிரசாத். இருந்தாலும் படத்தின் பின்னணி இசையை யார் அமைக்கிறார்கள் என அன்று கூட மேடையில் தயாரிப்பாளர்கள் பேசவில்லை. இதனிடையே, இசையமைப்பாளர் சாம் சிஎஸ் சற்று முன்பு அவருடைய எக்ஸ் தளத்தில் 'புஷ்பா 2' படத்தின் அல்லு அர்ஜுனின் போஸ்டர் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவர் படத்தில் பின்னணி இசையை அமைக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.
ஏற்கெனவே, இசையமைப்பாளர் தமன், 'புஷ்பா 2' படத்தில் சில காட்சிகளுக்கு இசையமைக்கிறேன் என்று பேசியிருந்தார். மூன்றாவதாக வேறு யாரும் இசையமைக்கிறார்களா என்பது இனிமேல் தெரிய வரும்.