பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் |
ராஜசேகர் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் மற்றும் பலர் நடிப்பில் இந்த வாரம் நவம்பர் 29ம் தேதி வெளியாக உள்ள படம் 'மிஸ் யூ'. இப்படம் தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியாகிறது. அதற்காக அங்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது 'புஷ்பா 2' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில் 'மிஸ் யூ' படம் அதற்கடுத்த வாரத்திலும் தொடர முடியுமா என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த சித்தார்த், “பட வெளியீடு என்பது எனது கட்டுப்பாட்டில் இல்லை, அதனால் அவற்றைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஒவ்வொரு படமும் பெரிய படம்தான். ஒரு படத்தின் பட்ஜெட் அது பெரிய படமா அல்லது சிறிய படமா என்பதைத் தீர்மானிப்பதாக இருக்கக் கூடாது.
எனது படம் இரண்டாவது வாரத்தில் தியேட்டர்களில் நீடிக்க வேண்டும் என்றால் சில விஷயங்கள் நடக்க வேண்டும். எனது படம் நன்றாகவும், ரசிகர்களுக்குப் பிடித்ததாகவும் இருக்க வேண்டும். வேறொரு படம் பற்றி அவர்கள்தான் கவலைப்பட வேண்டும், நான் கவலைப்பட வேண்டியதில்லை. படம் நன்றாக இருந்தால் தியேட்டர்களுக்கு மக்கள் வருவார்கள். ஒரு நல்ல படத்தைத் தியேட்டர்களில் இருந்து தூக்க முடியாது. சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு அதிகமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் அப்படி நடக்க வாய்ப்பில்லை,” என்று பதிலளித்தார்.
தமிழைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டில் பெரிய பட்ஜெட் என்று சொல்லப்பட்ட படங்கள் தோல்வியையும், சிறிய பட்ஜெட் என்று சொல்லப்பட்ட படங்கள் பெரிய வெற்றியையும் பெற்றன என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.