'ஜெய் ஹனுமான்' விரைவில் ஆரம்பம் | சோனி விழா : வருகிறது புதிய சேனல் | கடும் எதிர்ப்பால் மனோஜ் பாஜ்பாய் படத் தலைப்பு மாற்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு | பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் |

தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர் சாம் சி.எஸ். தற்போது அதிக படங்களுக்கு இசை அமைத்து வருகிறவர் அவர்தான். பின்னணி இசைக்கு முக்கியமான இசை அமைப்பாளராக கருதப்படுகிறார்.
அவர் இசை அமைத்த பல பாடல்களை ரசிகர்கள் அனிருத் இசை அமைத்த பாடல் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று சாம் சி.எஸ் வருத்தமுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எனது இசையில் ஹிட்டான பல பாடல்களை அனிருத் பாடி இருக்கிறார். அந்த பாடல்களுக்கு இசை அமைத்தது நான்தான் என்பது தெரியாமல் அவர் இசை அமைத்ததாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அனிருத்துக்கு பெரிய ரசிகர் வட்டம் இருப்பதால் அந்த பாடல்கள் சுலபமான ரசிகர்களை சென்று சேர்ந்து விடுகிறது. அதனால் அவர்கள் அப்படி நினைப்பதற்கும் காரணமாகி விடுகிறது. இப்போது அந்த நிலை மாறி வருகிறது.
அதேபோல எனது பல பாடல்களை சமூக வலைதளங்களில் பயன்படுத்துகிறார்கள், இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்திருக்கிறார்கள். ஆனால் அது என் இசையில் உருவானது என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அவர்களுக்கும் இப்போது தெரிய வருகிறது. எந்த பாடலாக இருந்தாலும் யார் இசை அமைத்தது, யார் பாடியது என்பதை உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார்.