'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

பார்க்கிங், லப்பர் பந்து என தொடர்ச்சியாக இரு வெற்றி படங்களை கொடுத்துவிட்டார் ஹரிஷ் கல்யாண். தற்போது அவர் கைவசம் நூறு கோடி வானவில், டீசல் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர லிப்ட் பட இயக்குனர் வினித் வர பிரசாத் இயக்கத்தில் புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் மலையாளம் நடிகர் செம்பியான் வினோத் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர் என தகவல்கள் ஏற்கனவே வெளியானது.
தற்போது இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க ஸ்டார் பட நடிகை பிரீத்தி முகுந்தன் இணைந்ததாக கூறுகின்றனர். இவர் சமீபத்தில் நடனமாடிய ‛ஆச கூட' எனும் ஆல்பம் பாடல் யுடியூப்பில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.