பிளாஷ்பேக் : கன்னட எழுத்தாளர் கதையை படமாக்கிய கே. பாக்யராஜ் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்தில் எடுக்கப்பட்ட படம் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் பார்வதி நாயர் படம் | மீரா மிதுன் மீதான வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்ய கோர்ட் மறுப்பு | திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் | வா வாத்தியார் : கை கொடுக்காமல் போன கார்த்தி | சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு |

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார். ரஹ்மானும் தங்களது பிரிவு குறித்து அறிவிப்பை வெளியிட்டார். இது ரஹ்மான் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருந்தது. அடுத்த சில மணி நேரத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை குழுவில் பணியாற்றி வரும் மோகினி டேவும் தன்னுடைய கணவர் மார்க் ஹார்ட்சுச்சை பிரிந்து விட்டதாக அறிவித்தார். இருவரும் ஒரே நாளில் விவாகரத்து அறிவித்திருப்பதால் பலரும் இருவரையும் இணைத்து செய்திகளை பரப்பினர்.
தங்களது துணையை பிரிந்த இரண்டு தம்பதிகளின் விவகாரங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில், ரஹ்மான் - மோகினி டே ஆகியோர் குறித்த வெளியான தகவல்களுக்கு ரஹ்மானின் மகன் அமீன் வேதனை தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஒரு குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த அமீன், 'வயதை தவிர இந்த இருவருக்கும் இடையே என்ன வித்தியாசம்' என தன் தந்தையை ஒரு குழந்தை என்பது போல் பதிவிட்டிருக்கிறார். மேலும் அதில் கூறியிருப்பதாவது: என் அப்பா ஒரு லெஜண்ட். அவரின் வேலைக்காக மட்டும் அல்ல, இத்தனை ஆண்டுகளாக அவருக்கு கிடைத்திருக்கும் மரியாதை, அன்புக்காகவும் தான்.
அவரை பற்றி பொய்யான மற்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரவுவது வேதனை அளிக்கிறது. ஒருவரின் வாழ்க்கை மற்றும் லெகசி பற்றி பேசும்போது உண்மையின் முக்கியத்துவம், மரியாதை நினைவில் இருக்கட்டும். தவறான தகவல்களை பரப்புவதை தயவு செய்து தவிர்க்கவும். அவரின் கண்ணியத்தை காப்போம். இவ்வாறு அமீன் கூறியுள்ளார்.
தன் தந்தையை தவறாக விமர்சிப்பவர்கள் குறித்து அமீன் வெளியிட்ட இந்த பதிவு வைரலாகியுள்ளது.