‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
தமிழ் சினிமாவில் பலத்த விமர்சனங்களைச் சந்தித்த ஒரு படம் 'வட சென்னை'. அப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டு முதல் பாகத்தை 2018ம் ஆண்டு வெளியிட்டார்கள். ஆறு வருடங்கள் கடந்த பின்பும் அதன் இரண்டாம் பாகத்தை இன்னும் ஆரம்பிக்கவில்லை. சமீபத்தில் நடந்த 'குபேரா' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் போது 'வட சென்னை இரண்டாம் பாகம்' 2026ல் ஆரம்பிக்கும் என தனுஷ் பேசியிருந்தார்.
ஆனால், கடந்த இரண்டு நாட்களாக 'வட சென்னை' இரண்டாம் பாகத்தில் சிம்பு நடிக்கப் போகிறார் என ஒரு தகவல். வட சென்னையை மையப்படுத்திய ஒரு கதையில் வெற்றிமாறன் நடிக்க சிம்பு நடிக்க உள்ளார் என மற்றொரு தகவல். இதில் எது உண்மை என்பது அறிவிக்கும் வரை தெரியாது. அல்லது வதந்தியா என்பதும் தெரியாது. இருந்தாலும் இது பரவி வருகிறது.
அடுத்து, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள 'வாடிவாசல்' படம் கைவிடப்பட்டது என கடந்த ஒரு வாரமாக ஒரு தகவல் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்காக பாடல் பதிவு ஆரம்பித்துவிட்டோம் என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சில மாதங்களக்கு முன்பே பதிவிட்டிருந்தார். அதையும் மீறி படம் 'டிராப்' என பரப்பி வருகிறார்கள்.
இப்படியான வதந்திகளுக்கு சம்பந்தப்பட்ட வெற்றிமாறன்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். என்ன வதந்தி வந்தாலும் சில இயக்குனர்கள் எதைப் பற்றியும் வாயைத் திறக்காமலேயே இருக்கிறார்கள். அது அவர்களைப் பற்றிய ஒரு நெகட்டிவ் இமேஜை உருவாக்குகிறது என்பதைப் பற்றிக் கூட கலைப்படாமல் இருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது என திரையுலகிலேயே பேசிக் கொள்கிறார்கள்.