தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
பாலிவுட் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி கடந்த 2022ல் 'தி காஷ்மீர் பைல்ஸ்' என்கிற படத்தை வெளியிட்டு நாடு எங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். 90களின் காலகட்டத்தில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களையும் அதனால் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்த உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது.
இதற்கு முன்னதாக கடந்த 2019ல் 'தி தாஷ்கண்ட் பைல்ஸ்' என்கிற படத்தையும் அவர் இயக்கி இருந்தார். காஷ்மீர் பைல்ஸ் படத்தை தொடர்ந்து 'தி வேக்ஸின் வார்' என்கிற படத்தை அவர் இயக்கினாலும் அது பெரிய அளவில் கவனம் பெறாமல் போனது.
இதையடுத்து அவர் 'தி டெல்லி பைல்ஸ்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டிலை 'தி பெங்கால் பைல்ஸ்' என மாற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் விவேக் அக்னிஹோத்ரி. இந்த படம் வரும் செப்.,5ல் வெளியாக இருக்கிறது. 1940களில் பிளவுபடாத வங்கதேசத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகி இருப்பதாலும் வங்காளத்தைப் பற்றியே படம் பேசுவதாலும் இதன் டைட்டிலை தி பெங்கால் பைல்ஸ் என மாற்றியுள்ளதாக கூறியுள்ளார் விவேக் அக்னிஹோத்ரி.