ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவி, பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்த இவருக்கு ஜான்வி, குஷி என இரு மகள்கள் உள்ளனர். 2018ல் துபாய் ஓட்டலில் குளியல் அறையில் தவறி விழுந்ததில் ஸ்ரீதேவி மரணம் அடைந்தார்.
ஸ்ரீதேவி தன்னை அழகாக காண்பிக்க எவ்வளவு தூரம் மெனக்கெட்டார் என்பதை அவரது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் சமீபத்திய ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛ஸ்ரீதேவி எப்போதும் தனது தோற்றத்தில் கவனமாக இருந்தார். தன்னை அழகாக காண்பிக்க கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொண்டார். சில சமயங்களில் தான் விரும்பிய தோற்றத்தை கொண்டு வர சாப்பிடாமல் கூட இருப்பார். இதனால் அவரது உடல்நிலை கூட பாதித்தது. அவரின் செயல் கவலை அளிக்கும் விதமாகவும் இருக்கும். என்னை திருமணம் செய்த காலத்தில் அவருக்கு லோ பிபி இருந்தது. இதனால் சாப்பாட்டை உப்பில்லாமல் எடுத்துக் கொள்வார். உணவுக் கட்டுப்பாட்டால் அவரின் உடல்நல போராட்டம் அதிகரித்தது. ஒரு சமயம் படப்பிடிப்பில் தளத்தில் ஸ்ரீதேவி மேற்கொண்ட உணவு கட்டுப்பாட்டால் மயங்கி விழுந்ததாக நாகார்ஜூனா என்னிடம் ஒருமுறை கூறினார்'' என்றார்.