'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
‛லால் சிங் சத்தா' படத்திற்கு பின் அமீர்கான் நடிப்பில் வெளியாக உள்ள பாலிவுட் படம் ‛சித்தாரே ஜமீன் பார்'. ஆர்எஸ் பிரசன்னா இயக்கி உள்ள இப்படம் வரும் ஜுன் 20ல் தியேட்டர்களில் ரிலீஸாகிறது. ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் ரிலீஸ் செய்கின்றனர். இப்படம் தொடர்பாக அமீர்கான் அளித்த பேட்டி...
‛சித்தாரே ஜமீன் பார்' படம் ரிலீஸாகிறது, எப்படி இருக்கிறது உங்கள் மனநிலை?
என் படம் வெளியாகும்போது பதட்டம், உற்சாகம் இரண்டும் இருக்கும். நான் செய்ததை பார்வையாளர்கள் விரும்புவார்களா இல்லையா, அவர்களின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று எண்ணும்போது பதட்டமும், மகிழ்ச்சியும் கலந்தே இருக்கும்.
தாரே ஜமீன் பார்... சித்தாரே ஜமீன் பார்... இரு படங்களுக்கும் என்ன வித்தியாசம்?
இரண்டு படங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும் இது தாரே ஜமீன் பார் படத்தின் தொடர்ச்சி என நீங்களே சொல்லிவிடுவீர்கள். தாரே ஜமீன் பார் படத்தில் குழந்தைகளுக்கு நான் உதவி செய்வது போல் என் கதாபாத்திரம் இருந்தது. இந்த படத்தில் எனக்கு அவர்கள் உதவுகிறார்கள். ஏனென்றால் என் வேடம் மிகவும் ரூடாக இருக்கும். என்னை அவர்கள் திருத்துவது போன்று இருக்கும். எல்லாவற்றையும் விட என் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. மிகவும் முரட்டுத்தனமான வேடம், என்னிடம் யாரும் பேச தயங்குவார்கள். அதனால் இந்த வேடத்தில் நான் மிகவும் ரசித்து நடித்தேன். அதேசமயம் என் நிஜ வாழ்க்கை அப்படிப்பட்டது இல்லை.
தாரே ஜமீன் பார் படத்தை நீங்கள் தான் இயக்கினீர்கள், இந்த படத்தை இயக்க வேண்டும் என எண்ணியது உண்டா...?
நெருக்கடியான சூழலில் தான் தாரே ஜமீன் பார் படத்தை இயக்கினேன். நான் என் நடிப்பை தான் ரசிக்கிறேன். இன்னமும் நான் என்னை ஒரு நடிகராகவே கருதுகிறேன். ஒருவேளை நான் இயக்குனராக களத்தில் இறங்கினால் அதன்பின் நான் நடிப்பேனா என தெரியவில்லை. அதனால் தான் இயக்கத்தை நான் தாமதப்படுத்துகிறேன்.
நம்முடைய சினிமாவில் குழந்தைகளை மையமாக வைத்து வெளியாகும் படங்கள் குறைவு, இதுபற்றி உங்கள் கருத்து...?
ஆமாம், இதை நானும் ஒப்புக் கொள்கிறேன். அதேசமயம் நான், ‛ஹம் ஹையின் ரஹி பியார் கே, தங்கல், தாரே ஜமீன் பார்' போன்ற படங்களை இயக்கி உள்ளேன். ஒருவேளை நமது துறையில் உள்ளவர்களுக்கு குழந்தைகள் பற்றிய படங்களை எடுக்க தெரியவில்லையா அல்லது குழந்தைகள் படத்திற்கு போதிய வியாபாரம் இல்லை என நினைக்கிறார்களா என தெரியவில்லை. நம் நாட்டில் நிறைய குழந்தைகள் உள்ளனர். அப்படியிருந்தும் ஏன் குழந்தைகள் படத்திற்கு வியாபாரம் இல்லை. தொடர்ந்து குழந்தைகள் தொடர்பான படங்கள் நிறைய தயாரிக்கப்பட வேண்டும். எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் அதுபோன்ற படங்களை தயாரிப்பேன்.
இவ்வாறு அமீர் கான் தெரிவித்தார்.