வயதான கமல், இளமையான திரிஷா: 'தக் லைப்' டிரைலர் சர்ச்சை | பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” | ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் | 'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? | ஆட்டுக்கார அலமேலு, முத்து, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ஞாயிறு திரைப்படங்கள் | தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? |
பாலா இயக்கி உள்ள வணங்கான் படத்தில் நடித்திருக்கிறார் அருண் விஜய். இந்நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பாலாவுக்கு ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், மன நெகிழ்வுடனும், கனத்த இதயத்துடனும் என் இயக்குனர் பாலா சார் அவர்களுக்கு, நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து நேசித்து ஒரு நடிகனாக எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கியவனுக்கு, தங்களின் இயக்கத்தில் பணியாற்ற வணங்கான் படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
நான் படப்பிடிப்பின் போது கூட இக்கதையின் பாதிப்பை முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில் என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடையச் செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன். எனது திரையுலக பயணத்தில் வணங்கான் ஒரு மிக முக்கியமான படமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை. இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
மக்கள் அனைவரும் இந்த படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் உங்கள் அருண் விஜய் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு இயக்குனர் பாலாவுடன் தான் அமர்ந்திருக்கும் புகைப்படம் மற்றும் தனது குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் அருண்விஜய்.