ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான கூட்டணியாக வலம் வந்த கூட்டணிகளில் ஒன்று அஜித் - இயக்குனர் சிவா கூட்டணி. இருவரும் இணைந்து 'வேதாளம், வீரம், விஸ்வாசம்' ஆகிய வெற்றிப் படங்களையும், 'விவேகம்' என்ற ஒரே ஒரு தோல்விப் படத்தையும் கொடுத்தனர். சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த 'கங்குவா' படம் நேற்று வெளிவந்தது.
'கங்குவா 2' படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் கேட்ட போது, “இயக்குனர் சிவா, அடுத்து அஜித் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார். அதற்குப் பின் அடுத்த ஆண்டு மத்தியிலோ, கடைசியிலோ 'கங்குவா 2' ஆரம்பமாகும்,” என்றார்.
'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' படங்களை முடித்த பின் சிவா இயக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளார் என்பது அஜித் ரசிகர்களுக்கான உறுதியான தகவலாக நேற்று கிடைத்தது. அஜித் - சிவா கூட்டணியில் வந்த படங்கள் நான்கிற்கும் 'வி' என்ற எழுத்தில் ஆரம்பமாகும் தலைப்புதான் வைக்கப்பட்டிருந்தது. அதனால், அவர்களது அடுத்த படத்திற்கும் அது போலவே 'வி' என்ற தலைப்புதான் வைப்பார்கள் என ரசிகர்களே முடிவு செய்துவிட்டார்கள்.
எனவே, சமூக வலைத்தளங்களில் நேற்றிலிருந்து 'வி' என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பல தலைப்புகளை ரசிகர்களே சொல்லி வருகிறார்கள். அதில் சீரியசான தலைப்புகளும் உண்டு, டிரோல் செய்யப்படும் தலைப்புகளும் உண்டு.