ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

புகழ்பெற்ற தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'குபேரா'. தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜிம் சர்ப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார், நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள 'குபேரா', இந்தியா முழுவதும் பலதரப்பட்ட பார்வையாளர்களை சென்றடைவதை நோக்கமாகக் கொண்டு மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.




