பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் புஷ்பா-2. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில், வருகிற 17ம் தேதி டிரைலர் வெளியாக உள்ளது. மேலும், இந்த புஷ்பா-2 படம் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது.
தற்போது புரமோஷன் பணிகளை பெரிய அளவில் தொடங்கி உள்ளார்கள். இந்த நேரத்தில் புஷ்பா-2 படத்தின் ரன்னிங் டைம் குறித்த ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த படம் 3 மணி நேரம் 10 நிமிடம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இவ்வளவு நேரம் இருந்தால் ரசிகர்கள் சலிப்படைவார்கள் என்று சொல்லி ரன்னிங் டைமை 2:30 மணி நேரம் வைக்குமாறு பலரும் கருத்து கூறிய போதும், புஷ்பா- 2 படம் விறுவிறுப்பான கமர்சியல் கதையில் உருவாகி இருப்பதால் நேரம் போவதே தெரியாது. அதனால் கண்டிப்பாக ரசிகர்கள் உற்சாகத்துடன் இந்த படத்தை பார்ப்பார்கள் என்று இப்படத்தின் இயக்குனர் சுகுமார் தெரிவித்திருப்பதாக டோலிவுட்டில் ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளது.