சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக பேசியதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் அதையடுத்து அவர் தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டு கொண்டார். என்றாலும் கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள கஸ்தூரியின் இல்லத்துக்கு போலீசார் சென்றார்கள். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அதையடுத்து தாங்கள் கொண்டு சென்ற சம்மனை அவர் வீட்டு சுவரில் ஒட்டிவிட்டு காவல் துறையினர் திரும்பினார்.
இந்த நிலையில் இன்று நடிகை கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், தெலுங்கு மக்கள் குறித்து நான் பேசியதற்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டேன். ஆனபோதும் அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணை நாளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நடைபெற உள்ளது.




