லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சூர்யா நடித்திருக்கும் கங்குவா படம் நவம்பர் 14ல் திரைக்கு வருகிறது. இதன் காரணமாக அவர் தீவிர புரமோஷனில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கி வரும் அன்ஸ்டாபபுல் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் சூர்யா. அப்போது சூர்யாவிடத்தில், உங்களுடைய முதல் க்ரஷ் யார் என்று பாலகிருஷ்ணா கேட்க அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் நழுவினார் சூர்யா. இதையடுத்து உங்களுடைய க்ரிஷ் யார் என்று தெரியாமல் விட மாட்டேன் என்று சொல்லி சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்திக்கு போன் செய்தார். அப்போது அவரிடத்தில் பாலகிருஷ்ணா, உங்கள் அண்ணன் சூர்யாவின் முதல் க்ரஷ் யார் என்று கேட்டால் சொல்ல மறுக்கிறார். அவருடைய முதல் க்ரஷ் யார் என்று நீங்கள் சொல்லுங்கள் என்று அவர் கேட்க, அதற்கு கார்த்தி, சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே நடிகையான கவுதமி தான் சூர்யாவின் முதல் க்ரஷ் என்று கூறினார். அதை கேட்ட சூர்யாவோ, நீ கார்த்தி இல்லடா கத்தி என்று தெலுங்கில் சத்தமாக சொல்ல, அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.