‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்ளில் ஒருவர் அல்லு அர்ஜுன். கடந்த மே மாதம் ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற போது அவர் நந்தியால் தொகுதியில் அவருடைய நண்பர் சில்ப ரவி சந்திர கிஷோர் தெட்டி என்பவருக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது நந்தியால் ஊரில் உள்ள சில்ப ரவி இல்லத்தில் பெரும் கூட்டமாக மக்கள் திரண்டனர்.
அதற்கு எந்தவிதமான முன் அனுமதியும் பெறாமல் இருந்த சூழ்நிலையிலும் போலீஸார் அல்லு அர்ஜுனுக்கு பாதுகாப்பு வழங்கினர். அவர் சென்ற பிறகு சிலர் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து புகார் அளித்தனர். அதையடுத்து அல்லு அர்ஜுன் மீதும், சில்ப ரவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ஆந்திரபிரதேச உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அல்லு அர்ஜுன், சில்ப ரவி ஆகியோர் முறையிட்டனர். கடந்த மாதம் இது குறித்து விசாரணை செய்த நீதிமன்றம் வழக்கை நவம்பர் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தது. இன்று அந்த வழக்கை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.
நந்தியால் தொகுதியில் சில்ப ரவி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோற்றுப் போனார். அவருக்காக அல்லு அர்ஜுன் பிரசாரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது துணை முதல்வராக உள்ள பவன் கல்யாண் ரசிகர்கள் அல்லு அர்ஜுனை அப்போது கடுமையாக விமர்சித்தார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. பவன் கல்யாணின் அண்ணன் சிரஞ்சீவியின் மைத்துனர் மகன் தான் அல்லு அர்ஜுன்.